இந்தியா வேகமாக நகரமயமாகி வருவதால், எதிர்காலத்திற்கு ஏற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற திட்டமிடல், மேம்பாடு மற்றும் சுகாதாரம் என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர், உருவாகி வரும் புதிய நகரங்கள் 21-ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இன்று, குப்பைகளை பதப்படுத்தி, குப்பை மேடுகளில் இருந்து நகரங்களை விடுவிக்கும் பணி நடைபெறுவதாகவும், நகர வளர்ச்சியில் ஒரு முக்கிய தூண் போக்குவரத்து திட்டமிடல் என்றும் தெரிவித்தார்.
பசுமை இயக்கம், சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் உயர்த்தப்பட்ட சாலைகள் போக்குவரத்துத் திட்டத்தில் சேர்க்க வேண்டியவைகள் என தெரிவித்த பிரதமர், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நகர்ப்புற நிர்வாக வல்லுநர்கள் புதுமையான திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.